மலேரியா, எய்ட்ஸ் சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகள் மூலம் குணப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் : 50 மருத்துவனைகளுக்கு பரிந்துரைத்த ஆஸ்திரேலியா

சிட்னி :  ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள்,  ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 2 மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவிலும் நூற்றுக்கணக்கானவர்களைத் தாக்கியுள்ளது. அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல் அடிப்படையில், 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.மேலும் அந்த நாட்டில் 785 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் வியாழக்கிழமை அயல்நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வரத் தடை விதிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர், மலேரியா மற்றும் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று குணப்படுத்தப்பட்டுள்ளனர். ரகசியமாக நடத்தப்பட்ட சோதனையில்,  அவர்களுக்கு எச்.ஐ.வி மருந்து கலேட்ரா மற்றும் மலேரியா சிகிச்சைக்கான மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிப் பெற்றதையடுத்து, அதே மருந்துகள் இப்போது ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள 50 மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக சோதனைக் குழாய்களில் பயன்படுத்தும்போது இரண்டு மருந்துகளும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோய் வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சியில் , மலேரியா மற்றும் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகள் கொரோனா நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>