×

பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கும் கோவிட் - 19: வைரஸ் பரவல் பற்றி தைவானில் புதிய ஆய்வு!

தைவான்: கொரோனா பாதிப்பானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் பற்றி தைவானில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2003ம் ஆண்டில் சார்ஸ் நோய்க்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் 774 பேர் உயிரிழந்தனர். இதையும் தற்போது புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸையும் ஒப்பிட்டு தைவானில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தைவானில் 2003ம் ஆண்டில் ஏப்ரல் 25 முதல் மே 19ம் தேதி வரை காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதேபோல கடந்த ஜனவரி 31ம் தேதி வரை புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஆய்வுக்கு எடுத்து கொண்டுள்ளனர். இதில் சார்ஸ் நோய்க்கு ஆண்களை விட பெண்களே அதிகம் இலக்கானதாகவும், பாதிக்கப்பட்ட ஆண், பெண் விகிதம் 0.52 : 1 என்ற அளவில் இருந்ததாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வூஹானில் புதிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது, இந்த விகிதம் 1.3: 1 என இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சார்ஸ் பெண்களை அதிகம் பாதித்த நிலையில், புதிய கோவிட் -19 ஆண்களை அதிகம் பாதிப்பது தங்களுடைய விவரங்களில் தெரிய வந்திருப்பதாக ஆய்வை மேற்கொண்ட யூ ஜாங் சூ மற்றும் என்சென்லாய் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவர்கள், முதியவர்களை விட இளைஞர்களே சார்ஸ் நோயால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர் என்றும், சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களோடு ஒப்பிடும் போது கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் சுமார் 20 வயது அதிகம் உள்ளவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் புதிய கொரோனா வைரஸ் பற்றி முழுமையாக முடிவுக்கு வர இன்னும் நீண்ட ஆய்வு தேவைப்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Tags : Taiwan , Female, Male, Affecting, Cowitt - 19, Taiwan, Study
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...