×

கொரோனா காரணமாக தமிழக சட்டப்பேரவை நாட்கள் குறைப்பு: மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு

சென்னை:  கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதிக்கு பதிலாக மார்ச் 31ம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு சபாநாயகர் அறிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : announcement ,Speaker ,session ,Tamil Nadu ,Corona Legislative , Corona, Speaker of the House, Speaker
× RELATED சென்னை, காஞ்சிபுரம், உள்பட 4...