×

கொரோனா பாதித்தவர்களின் நிலை என்ன? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் - விஜயபாஸ்கர் - முதலமைச்சர் காரசார விவாதம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் நிலை என்ன என்று சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.60 கோடி ஒதுக்கியது போதுமா? என்றும், ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுமா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

இதுவரை கொரோனா சோதனை செய்யாதவர்கள் கூட பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். போர்க்கால அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு அதிகமான தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் என்றும், விதிமுறைகளை தளர்த்தி டெண்டர் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விளக்கம்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும், மக்கள் எங்கு அதிகமாக கூடுகிறார்களோ அங்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : MK Stalin - Vijayabaskar ,Corona ,Vijayabaskar ,Edappadi Palanisamy ,MK Stalin ,Tamil Nadu Legislative Assembly , Coronavirus, Tamil Nadu Legislative Assembly, MK Stalin, Minister Vijayabaskar, Chief Minister Edappadi Palanisamy
× RELATED பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து;...