×

கொரோனா பீதி...சென்னையில் சோதனை செய்யாமல் இறக்கப்பட்ட சீன சரக்குகள்: கிருமி நாசினி தெளிக்கப்படாமல் இறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

சென்னை: சீன பயணிகள் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், இன்று காலை சீனாவில் இருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை வந்தடைந்துள்ளது. தொடர்ந்து, சீனாவில் இருந்து வந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட சரக்குகள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என்று தற்போது புகார் எழுந்துள்ளது. மேலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படாமல் சரக்குகள் இறக்கப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சீனாவில் இருந்து பொம்மைகள், லேப்டாப்புகள், தோல்பொருட்கள் உள்ளிட்டவை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சீனாவில் பரவி உள்ள கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 384 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பல லச்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சோதனை செய்து அனுமதித்து வருகின்றன. இதேபோல் இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமான நிலையம், துறைமுகம் பகுதிகளில் சோதனைக்கு பிறகே வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் சீனாவில் இருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை வந்தடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சரக்கு விமானத்தில் உள்ள பொருட்கள் மீது எந்தவித பரிசோதனையும் உட்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி ஏற்படும் நிலையில் திடீரென சென்னை வந்த சீன சரக்கு விமானத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Chennai ,Chinese ,Coronation , Corona, Madras, test, Chinese goods
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...