×

கொரோனா வைரஸ் எதிரொலி: கடும் நெருக்கடியை சந்திப்பதாக கார் உரிமையாளர்கள் வேதனை!

சென்னை:  கொரோனா வைரஸ் காரணமாக வாடிக்கையாளர்களின் வருகை இல்லாததால், நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் வாடகை கார் உரிமையாளர்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வணிக வளாகம், திரையரங்கு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தொழிற்சாலை, துணிக்கடைகள் என பல துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது போல, வாடகை கார் வைத்திருக்கும் நபர்களுக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஓலா, ஹூபரில் இணைத்து கார் ஓட்டும் உரிமையாளருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஷார் ஆட்டோ, மெட்ரோ இரயில் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான், ஓலா, ஹூபர் என முன்பதிவு  செய்யும் நிலையில் இருக்கின்றனர்.

இதனால்,  கடனில் கார் வாங்கியுள்ள நபருக்கு மாதாந்திர கடன் கட்டுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், குடும்ப நிலையை சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் முழுமையாக குணமடைய இன்னும் சில மாதங்களாகும் நிலை ஏற்பட்டிருப்பதால், இதுவரை காணாத பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடன் பெற்று வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கடன் அளித்திருக்கக்கூடிய  நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்காமல் இருக்கவேண்டுமெனவும் வாகன உரிமையாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


Tags : crisis ,Car owners ,Corona , Corona virus, echo, crisis, car owner, agony
× RELATED குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!:...