×

ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும். மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும். ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு மக்கள் உலக நடப்புகளை அறிந்தவர்கள், புத்திசாலிகள். அரசு நடவடிக்கையைப் பாராட்டுவார்கள், என கூறியுள்ளார்.


Tags : Government ,Tamil Nadu ,Germany ,Bavaria ,State ,Chidambaram , Coronavirus, p. Chidambaram, Tamil Nadu, full curfew
× RELATED தமிழுக்கு பெருமை சேர்த்த பாதிரியார்...