×

கொரோனாவை கட்டுப்படுத்தும் சட்டம் நமக்கு இல்லையா? மாநிலங்களவையில் கேள்வி

புதுடெல்லி:  மாநிலங்களவையில் மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா நேற்று பேசுகையில், ‘‘நாம் தான் நாட்டின் சட்டங்களை உருவாக்குகிறோம். நாம் தான் நாடாளுமன்றம். நாட்டில் தற்போது தொற்றுநோய் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்கும்படி அரசு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்து நமக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறதா?  நாம் இந்திய சட்டத்துக்கு மேலானவர்களா? நாம் அதற்கு கட்டுப்பட்டவர்கள் இல்லையா? ” என்றார்.  இதற்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில், ‘‘ மருத்துவர்கள் நாட்டிற்காக சேவையாற்றுவது போல எம்பிக்கள் நாட்டுக்கு சேவையாற்றுகின்றனர். அரசை நடத்துவதற்கு பட்ஜெட்டை நிறைவேற்றுவது முக்கியமாகும்.

இதுதான் நல்ல தலைமையின் அடையாளம்். நாட்டுக்காக நாம் நமது கடமையை செய்கிறோம். மக்கள் நமக்கு ஆதரவு தருகிறார்கள்,’’ என்றார்.  கொரோனாவிற்கு எதிரான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்போம் என மாநிலங்களவை உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

Tags : Rajya Sabha , Corona, Rajya Sabha, Congress
× RELATED போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு