×

சொகுசு பைக் மாயம்

தாம்பரம்: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (28). இவர் தாம்பரம், பஜனை கோயில் தெருவில் தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பிரவீன்குமார், தனது புல்லட் பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு, தூங்கச் செல்வது வழக்கம்.  நேற்று காலை வந்து பார்த்தபோது, தனது பைக் காணாமல் போனது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதிகாலையில் ஒருவர், பைக்கை திருடிச் செல்வது தெரிய வந்தது.  இதுகுறித்து அவர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Luxury bike ,missing
× RELATED பைக் மாயம்