×

வீட்டில் கஞ்சா விற்றவர் கைது

திருவொற்றியூர்: வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை ஜே- பிளாக் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மேற்கண்ட பகுதியில் ரகசியமாக கண்காணித்தபோது, ஒரு வீட்டிற்கு அதிகளவில் வெளி ஆட்கள் வந்து செல்வது தெரிந்தது. இதையடுத்து, அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது, கஞ்சா விற்பது தெரிந்தது. இதுதொடர்பாக மணிகண்டன் (31) என்பவரை கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.  இதில், தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Man arrested ,cannabis
× RELATED கஞ்சா, மது போதையில் ரகளை ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு அடிஉதை: ரவுடி கைது