×

பாதுகாப்பாக பிரீமியம் செலுத்தும் வழிமுறை: எல்ஐசி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ன. இந்நிலையில், எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை பாதுகாப்பாக செலுத்த கேட்டுக்கொள்கிறது. அதன்படி பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, e-wallet மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்தப்படும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் கிடையாது. மேலும், licindia.in என்ற இணையதளம் மற்றும் my LIC என்ற மொபைல் செயலி மூலம் எல்ஐசி பிரீமியத்தை செலுத்தலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு 022-6827 6827 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், எல்ஐசியின் தென்மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags : LIC Announcement , Coronavirus, LIC
× RELATED புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250