×

கூடுவாஞ்சேரி அருகே 2 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவன் கைது

சென்னை: செங்கல்பட்டு, பொத்தேரி, கூடுவாஞ்சேரி, வண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில், கல்லூரி மாணவர்களே, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை தைலாவரம் கூட்டு ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர், கஞ்சா விற்பனை செய்வதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு மாறு வேடத்தில் சென்றனர். அப்போது, போலீசாரை கண்டதும், அங்கிருந்த வாலிபர்கள் தப்பியோடினர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று, ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரை சோதனை செய்தபோது, கஞ்சாவை மறைத்து ைவத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், புதுடெல்லியை சேர்ந்த பிரணவ்குமார் (21). பொத்தேரி எஸ்ஆர்எம் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் 4ம் ஆண்டு படித்து வருகிறார் என தெரிந்தது. மேலும் விசாரணையில், தன்னுடன் தங்கி படிக்கும் மற்றொரு மாணவன் ஜிமிஷ் என்பவர், பிரணவ் குமாரிடம் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்யும்படி கூறினார். அதன்படி, அங்கு சென்றபோது போலீசில் சிக்கியதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிைறயில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : College student ,ganja ,Guduvancheri Guduvancheri , Guduvancheri, 2 kg of cannabis, college student, arrested
× RELATED ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!!