×

வடபழனி-ஒரகடம் இடையே பேருந்து சேவை தொடக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: வடபழனியிலிருந்து ஓரகடத்துக்கு பஸ் இயக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் 100 ஊராட்சிகள் உள்ளன. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.  இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு, 58 ஊராட்சிகள் கொண்ட ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மற்றும் 42 ஊராட்சி கொண்ட குன்றத்தூர் ஒன்றியத்தை மற்றொரு தாலுகாவாக பிரிக்கப்பட்டது. இந்த இரண்டு தாலுகாவிற்கு வருவாய் கோட்டாச்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் பகுதியில் குன்றத்தூர் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

 தற்போது குன்றத்தூர் தாலுகாவில் அடங்கிய படப்பை, மணிமங்கலம், சேத்துப்பட்டு, ஒரத்தூர், கரசங்கால், காவனூர், வைப்பூர், வடக்குபட்டு, சென்னாகுப்பம், வட்டம்பாக்கம், நாட்டரசன்பட்டு, செரப்பணஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள மக்கள், குன்றத்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லை.  இதனால் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குன்றத்தூர் பகுதிக்கு செல்ல, தாம்பரம் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் படப்பை பகுதியில் இருந்து மணிமங்கலம், சோமங்கலம் வழியாக குன்றத்தூர் வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது.  இதனையடுத்து ஒரகடத்தில் இருந்து படப்பை, மணிமங்கலம், முடிச்சூர், திருமுடிவாக்கம், குன்றத்தூர், போரூர் வழியாக வடபழனி வரை புதிய வழித்தடத்தில் 4 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இதனால் படப்பை சுற்று வட்டார கிராம மக்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

Tags : Vadapalani-Oragadam , Vadapalani, Oragadam, bus service, public happiness
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...