×

இ-சேவை மையம் மூடல்

அண்ணாநகர்: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள், பெரிய ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக வளாகங்களை வரும் 31ம் தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தினசரி 3 முறை கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் சுத்தத்தை கடைபிடிக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 8வது மண்டலம் அமைந்தகரையில் இயங்கி வரும் இ-சேவை மையம், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மூடப்பட்டது.

Tags : E-service center ,closure
× RELATED முக்கொம்பு அணையில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா மையம் மூடல்