×

காதலர்களை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்: இணை கமிஷனர் நடவடிக்கை

சென்னை: காரில் தனியாக பேசிக்கொண்டிருந்த காதலர்களை மிட்டி 5 ஆயிரம் பறித்த தலைமை காவலர் மற்றும் காவலரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். சென்னை கே.ேக.நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (28). தனியார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கே.ேக.நகரில் தனது காதலியுடன் காருக்குள் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.  அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட கே.கே.நகர் காவல்நிலைய தலைமை காவலர் சிவகுரு மற்றும் காவலர் திலகர் ஆகியோர், காரில் காதலியுடன் பேசிக்கொண்டிருந்த சத்யராஜிடம் சென்று, காரில் உடன் இருக்கும் பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதோடு இல்லாமல் அந்த பெண்ணையும் மிரட்டி அவரின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு இருவரும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் காவலர்கள் இருவரும், ‘உங்களை விடவேண்டும் என்றால் 5 ஆயிரம்  கொடுக்க வேண்டும்’ என்று மிரட்டியுள்ளனர். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத சத்யராஜ் தனது நண்பருக்கு போன் செய்து 5 ஆயிரம் எடுத்து வர சொல்லி காவலர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார்.  அதன்பிறகுதான் சத்யராஜ் மற்றும் அவரது காதலியை விடுவித்துள்ளனர். இதற்கிடையே இளம்பெண் செல்போன் நம்பருக்கு காவலர்கள் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து காதலன் சத்யராஜிடம் கூறியுள்ளார்.  உடனே சத்யராஜ் தனது நண்பருடன் சென்று இரண்டு காவலர்கள் மீதும் நேற்று கே.ேக.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதல் நாள் நடந்த சம்பவம் குறித்தும், தலைமை காவலர் மற்றும் காவலர் ₹5 ஆயிரம் வாங்கியது குறித்தும் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கவனத்திற்கு அவர்கள் கொண்டு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

உடனே இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ‘காவலர்கள் மீதே புகார் அளிக்கிறீர்களா?’ என்று சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு ெசய்துள்ளார். பிறகு வேறு வழியின்றி சத்யராஜ் நடந்த சம்பவம் குறித்து உயர் காவல் துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.  அதன்படி இணை கமிஷனர் மகேஸ்வரி கே.கே.நகர் காவல் நிலைய தலைமை காவலர் சிவகுரு, காவலர் திலகர் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த காதலர்களிடம் மிரட்டி 5 அயிரம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து நேற்று இணை கமிஷனர் மகேஸ்வரி அதிரடியாக இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், முழுமையாக விசாரணை நடத்தாமல் புகார் கொடுக்க வந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது குறித்து இன்ஸ்பெக்டரை கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : guards ,lovers , Lovers, 2 guards, workplace change, co-commissioner
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா