×

வடிவுடையம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

திருவொற்றியூர்:  கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் பெரிய கோயில்களை மூட வேண்டும் என  தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.  இதன்படி திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில் ராஜகோபுர வாசல் நேற்று காலை 8 மணிக்கு மூடப்பட்டது.  வரும் 31ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில்,  ‘‘அரசு உத்தரவுப்படி திருக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வழக்கப்படி கோயிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும்,’ என்றனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் வடிவுடையம்மன் அம்மனை தரிசிக்க  வந்திருந்தனர்.


Tags : Pilgrims , Coronavirus, temple of the goddess, devotees darshan
× RELATED திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள்...