×

உலகை உலுக்கிய கொள்ளை நோய்கள்: உயிரிழந்தோர் எண்ணிக்கை

* உலக வரலாற்றில், மானுட இனம் பல்வேறு காலக்கட்டங்களில் ஏதேனும் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நவீன காலத்தில் கூட கொள்ளை நோய்களின் தாக்கம் தொடர்வது பெரும் கவலைக்குரியதாக உள்ளது. அன்டோனைன் பிளேக் தொடங்கி, கொரோனா வைரஸ் (கோவிட்-19) வரை பெரும் உயிர்க்கொல்லியாக மானுட இனத்தை கலங்கடித்த கொள்ளை நோய்களின் வரலாறு வருமாறு:

பிளேக்
* எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிய நோய். ஐரோப்பிய மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் பேரை பலி கொண்ட மிகக்கொடிய கொள்ளை நோய். பலியானவர்கள் அளவுக்கு மக்கள் தொகை உயர்வதற்கு 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

பெரியம்மை
* இந்த நோய் காரணமாக, பூர்வகுடி அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேர் இறந்து விட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் 18ம் நூற்றாண்டில், ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதன்பிறகே, எட்வர்டு ஜென்னர் என்பவர் 1796ம் ஆண்டில் இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்.

ஜஸ்டினியன் பிளேக்
* இந்த நோய் குறித்த சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது. ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு இந்த நோய் தாக்கம் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

காலரா
* உலகம் முழுவதும் 18ம் நூற்றாண்டில் பரவிய இந்த நோயால், பல லட்சம் பேர் உயிரிழந்தனர். எத்தனை பேர் இறந்தார்கள் என்ற துல்லியமான புள்ளி விவரம் வெளியாகவில்லை.

2019 - மார்ச் 17 முதல் இதுவரை (தொடர்ந்து பரவி வருகிறது)
*  கடந்த 11ம் தேதி உலக சுகாதார நிறுவனம் அளித்த புள்ளி விவரத்தின்படி. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,900. பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து பலரின் உயிரை பறித்து வருவதால், இந்த எண்ணிக்கை தற்போது 10,000ஐ தாண்டி விட்டது.

* அன்டோனைன் பிளேக் 50 லட்சம்

* ஜஸ்டினியன் பிளேக் 3 - 5 கோடி

* ஜப்பானிய பெரியம்மை 10 லட்சம்

* பிளாக் டெத் (புபோனிக் பிளேக்) 20 கோடி

* பெரியம்மை 5.6 கோடி

* 17ம் நூற்றாண்டு பிளேக் பேரழிவு 30 லட்சம்

* 18ம் நூற்றாண்டு பிளேக் பேரழிவு 6 லட்சம்

* காலரா 6-10 லட்சம்

* 3வது பிளேக் 1.2 கோடி

* மஞ்சள் காய்ச்சல் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி 1 லட்சம் - 1.5 லட்சம்

* எச்ஐவி/எய்ட்ஸ்  1981 முதல் இதுவரை 2.5-3.5 கோடி

* ஸ்பானிஷ் புளூ காய்ச்சல் 4-5 கோடி

* ரஷ்ய புளூ காய்ச்சல் 10 லட்சம்

* ஆசிய புளூ காய்ச்சல் 11 லட்சம்

* ஹாங்காங் புளூ காய்ச்சல் 10 லட்சம்

* பன்றிக்காய்ச்சல்  2 லட்சம்

* சார்ஸ் 770

* எபோலா 1.13 லட்சம்

* மெர்ஸ் 2012 முதல் இதுவரை  850


Tags : world , Coronavirus, pestilence, and death toll
× RELATED கந்தர்வகோட்டை அருகே உலக பாரம்பரிய தின ஓவியப்போட்டி