×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டினாலும் சென்னையில் வாகன நெரிசல் குறையவில்லை: மைதானங்களை மூடியதால் சாலைகளில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள்

சென்னை:  பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் உரையாற்றிய பிறகு தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு வித அச்சத்துடன் காணப்படுகின்றனர். அப்படி இருந்தாலும் மாநில அரசு கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு செய்யாததால் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறித்து மக்களிடம் சரியாக தகவலை சென்று சேர்க்காததே இதற்கு காணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மக்கள் வழக்கம் போல் சுற்றி வருகின்றனர்.

கடந்த 16ம் தேதி முதல் விளையாட்டு மைதானம், மாநகராட்சி பூங்காக்கள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாலைகளில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.  சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கொரோனா அச்சம் குறித்து மக்கள் இடையே எந்த அச்சமும் இல்லை. ரயில் சேவைகள் குறைக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. பறக்கும் ரயில் மற்றும் தாம்பரம் டூ கடற்கரை ரயில்கள் அனைத்தும் கூட்ட நெரிசலுடன் தான் செல்கிறது.கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் எந்த வித அச்சமின்றி நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் சுற்றி வருகின்றனர். ெசன்னை முழுவதும் டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் வழக்கம் போல் கூட்டம் அலைமோதியது. கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இருந்தாலும், மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

Tags : government ,cricketers ,Chennai ,roads ,stadiums ,Corona , Despite ,government, intensification, Corona,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி