×

சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்ல வேண்டும்: துணை தூதரகத்தை மலேசிய பயணிகள் முற்றுகை

சென்னை: சிறப்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு அழைத்து செல்ல கோரி தேனாம்பேட்டையில் உள்ள மலேசியா துணை தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொரோனா பாதிப்பு காரணமாக மலேசியா தனது எல்லைகளை மூடி உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் விமானங்கள் வருவதற்கு அந்த நாடு தடை வித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களுக்காக சென்னை வந்த 500க்கும் மேற்பட்ட மலேசியாவை சேர்ந்தவர்கள், நாடு திரும்ப முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கி உள்ளனர்.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மலேசியா துணை தூதரகத்தை ேநற்று நூற்றுக்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள் முற்றுகையிட்டு, சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூதரக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.



Tags : Malaysian ,Consulate , special, plane, Malaysian passenger ,consulate
× RELATED மலேசியாவில் இருந்து தமிழக...