×

6 சட்டக்கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பு தொடக்கம்

சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:
* திருச்சி மற்றம் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரிகளில் 11.71 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
* வேலூர், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிதாக எல்எல்எம் பட்டப்படிப்பும், மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம் ஆகிய சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக எல்எல்எம் பட்டப்படிப்பு பிரிவுகளும் தொடங்கப்படும்.
* திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைகழகத்தில் 10.65 லட்சம் செலவில் சட்ட வரலாற்று மாநாடு நடத்தப்படும்.
* திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலையில் உள்ள சட்ட வரலாற்று அருங்காட்சியகம் 15 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.
* திருச்சியில் தமிழ்நாடு  தேசிய சட்டப்பல்கலையில் மகளிர் நலச்சட்ட மையம், தென்னிந்திய சட்ட வரலாற்று மையம் ஆகியவற்றை 20 லட்சம் செலவில் நிறுவப்படும்.

Tags : Masters of Law Of the 6 ,law schools ,Masters in Law , 6 law ,schools, Masters ,Law
× RELATED மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள் ...