×

மத்திய சிறைகளில் சோதனைக்கு டிடெக்டர் கருவி

சட்டப்பேரவையில் சிறைத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:
* திருவள்ளூர் கிளைச்சிறை மாவட்ட சிறையாக 11 கோடியில் மேம்படுத்தப்படும்.
* செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 100 சிறைவாசிகள் அடைக்கும் வகையில் கூடுதல் தொகுதி கட்டுதல் மற்றும் பூந்தமல்லி தனிக் கிளைச்சிறையில் 1.50 கோடி செலவில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.
* சிறைவாசிகள் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்வதை தடுத்திட அனைத்து மத்திய சிறைகளிலும் 1.36 கோடி செலவில் கம்பி வடம் இல்லாத டிடெக்டர் சோதனை கருவி கொள்முதல் செய்யப்படும்.
* சிறைவாசிகள் நடமாட்டத்தினை கண்காணித்திடவும், அசம்பாவித சம்பவங்களை தடுத்திடவும் ₹50 லட்சம் செலவில் 50 உடல் அணிந்த கேமராக்கள் கொள்முதல் செய்யப்படும் மற்றும் தலைமை அலுவலகத்தில் சர்வர் நிறுவப்படும்.
* புழல் மத்திய சிறை வளாகத்தில் வானொலி நிலையம் நிறுவப்படும்.
* சிறைவாசிகளுக்கான உணவு முறையினை மேம்படுத்துவதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.



Tags : testing ,prisons ,Federal Detectives for Detector Tool , Detector ,testing ,federal prisons
× RELATED இலங்கை சிறையிலிருந்து...