குடந்தையில் விற்பனை செய்வதற்காக துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த டாக்டர் உள்பட 3 பேர் கைது: 100 தோட்டாக்கள் பறிமுதல்

கும்பகோணம்: குடந்தையில் விற்பனை செய்வதற்காக துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த டாக்டர்,  சிலை கொள்ளையன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் துப்பாக்கிகள் பயன்பாடு அதிகம் இருப்பதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ரவுடிகள், திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைதாகி வெளியே சென்றவர்கள், சந்தேகத்துக்கு இடமான நபர்களை போலீசார் கண்காணித்து வந்த

னர். இந்நிலையில், கும்பகோணம் விளந்தகண்டத்தை சேர்ந்த சக்திவேலை (35) என்பவரை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும், துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த துப்பாக்கியை திருப்பனந்தாள் மகாராஜாபுரத்தை சேர்ந்த டாக்டர் ராம்குமாரிடம் வாங்கியதாகவும், துப்பாக்கிகளை விற்க டாக்டருக்கு உதவியாக தானும், முட்டக்குடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி அரவிந்தன் (40) ஆகியோரும் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, போலீசார் கூறியதாவது:

டாக்டர் ராம்குமார் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்து விட்டு சோழபுரத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் துப்பாக்கி புதையல் கிடைத்தது. ஏர் கன் வகை துப்பாக்கி உட்பட 6 துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. டாக்டர் ராம்குமார் துப்பாக்கி பிரியர். வெளிநாடுகளில் இருந்து கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் துப்பாக்கியை விலை கொடுத்து வாங்கி பல வகையான துப்பாக்கிகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். இது தெரிந்து துப்பாக்கி கேட்டு வருபவர்களுக்கு அவர் சப்ளை செய்து வந்துள்ளார். துப்பாக்கிகளை விற்க சக்திவேலும், அரவிந்தனும் முகவர்களாக செயல்பட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, டாக்டர் ராம்குமார், அரவிந்தன், சக்திவேல் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

Related Stories:

>