×

மலேசியா விமானம் ரத்தால் கடும் வாக்குவாதம் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட பயணிகள்

திருச்சி: மலேசியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் திருச்சி விமான நிலையத்தை பயணிகள் நேற்று மாலை முற்றுகையிட்டு தூதரக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலிண்டோ, ஏர் ஏசியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் ஏர்ஏசியாவில் மலேசியா செல்வதற்காக டிக்கெட் புக் செய்த மலேசியா நாட்டு பயணிகள் 100 பேர், கடந்த 11ம் தேதி முதல் திருச்சி விமான நிலையம் வந்து செல்கின்றனர். பயணிகளிடம் கொரோனா வைரஸ் பீதியால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என நிர்வாகம் தரப்பில் ஊழியர்கள் கூறினர். இருப்பினும், மாற்று ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை அடுத்து பயணிகள் கடந்த 6 நாட்களாக வந்து, வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 நேற்று மாலை மீண்டும் விமான நிலையம் வந்த பயணிகளிடம் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்தை முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த துாதரக அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலேசியா செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து விமான நிலைய வட்டார அதிகாரிகள் கூறுகையில், மலேசியாவில் இருந்து இயக்கப்படும் விமானங்களை அந்நாட்டு அரசு ரத்து செய்து உத்ததரவிட்டுள்ளது. இதனால் அங்கிருந்து விமான சேவை இல்லாதால் இங்கிருந்து மலேசியா செல்வதில் பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : Passengers ,flight ,airport ,Malaysia ,Trichy ,Malaysia Airlines ,Ratal Passengers Blocking Trichy Airport , Malaysia ,Airlines, Ratal,Trichy airport
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...