×

கொரோனா பரவலை தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் டிவிட்டர் பதிவு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:அரசின் அனைத்து எச்சரிக்கைகள், விழிப்புணர்வு பரப்புரைகளையும் கடந்து மதுக்கடைகளில் கூட்டம் வழிகிறது. மதுக்கடைகள் கொரோனா வைரசை பரப்பும் மையங்களாக மாறி விட கூடாது. ஆகவே, மாபெரும் மனித பேரழிவை தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒருநாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை. அவரது அறிவிப்பை மதித்து தனித்திருப்போம், விழித்திருப்போம். இதையே அடுத்த 3 வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக்கொள்ள முயலுவோம். மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் வணிக அமைப்புகள், தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்கள் தாராளமாக நன்கொடை வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.



Tags : Bartenders ,corona spread ,Ramadas , prevent, corona spread,Ramadas ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...