×

கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் பயோமெட்ரிக் பயன்படுத்த ஊழியர்களுக்கு தடை

சென்னை: கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலையில், ஊழியர்கள் பயோமெட்ரிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் நிர்வாகத்தினருக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் சிப்காட் திட்ட அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில், பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் எம்.வி.கார்த்திகேயன் கலந்துகொண்டு தொழிலாளர்களிடம் பேசினார்.

அதில், தொழிற்சாலைக்குள் நுழையும்போது, அனைவரும் உடலின் வெப்பநிலையை கண்டறியும் கருவியை பயன்படுத்த வேண்டும், பயோமெட்ரிக் முறையை தவிர்க்கவும், முக கவசம் அணிந்து, ஒருவருக்கு ஒருவர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினி உபயோகிக்க வேண்டும். மேலும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று வரும் தொழிலாளர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதேபோல் மருத்துவர் வெங்கட்ராமன் பேசுகையில், இருமல் மற்றும் தும்மல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தொழிற்சாலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். முகாமில் 85 தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள், ஐ.சி.எம்.ஏ தலைவர் ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் கிருட்டிண மூர்த்தி, பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் ஜி.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : factory , Employees, banned,biometrics, Kummidipoondi, factory
× RELATED தூய்மை பணியாளர்கள் போராட்டம்