×

வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் அரசு வேண்டுகோள்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:  தமிழக அரசு கொரோனா சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதல்கட்டமாக ஒதுக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். மின் கட்டணம், குடி நீர் கட்டண வசூலை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். முதியோர் உள்ளிட்டு வழங்கப்படும் உதவித் தொகையை இரண்டு மாதங்களுக்கு சேர்த்து வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் தலா ரூ.5,000 சிறப்பு நிதி வழங்கிட வேண்டும். அதேபோல சிறு-குறு தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், நுண்நிதி நிறுவனங்கள் வங்கியில் வாங்கியுள்ள கடன்கள் கட்டுவதற்கு ஒரு வருடம் விலக்களிக்க வேண்டும். மத்திய அரசின் சார்பாக  மக்களிடம் பேசிய பிரதமர் வரும் 22ம் தேதி அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு முக்கியமானது.


Tags : Balakrishnan Immediate ,K Balakrishnan , relief, income-affected, K Balakrishnan
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...