×

தேசிய போட்டிகளில் வென்றவர்களுக்கு அரசு உதவி

சென்னை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்,  தமிழ்நாடு அரசு வழங்கும் உபகரணங்களைப் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலர் பா.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் சார்பாக ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை  நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான விளையாட்டு உபகரங்கணங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த உபகரணங்களை பெற விரும்புவோர் ஏப்.3ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட  விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலுகத்துக்கு போய் சேரும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை, இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து அலுவலக நாளில் அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் மட்டும்,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், எண்:30, கிழக்கு கிளப் சாலை, ஷெனாய் நகர் நீச்சல் குள வளாகம், ஷெனாய் நகர், சென்னை-600030 என்ற முகவரிக்கு நேரிலோ, 044-26644794 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.Tags : Government ,competitions , National Competition, Government of Tamil Nadu
× RELATED அனுமதி கொடுத்தாலும் இயக்க முடியாத...