×

17,000 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு முக கவசம்: மேலாண் இயக்குநர் கணேசன் தகவல்

சென்னை: போக்குவரத்து மேலாண் இயக்குநர் கணேசன் வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றுகின்ற 8,500 ஓட்டுநர்கள் மற்றும் 8,500 நடத்துநர்களுக்கு பாதுகாப்பான முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.  தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில், வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து பணிமனைப் பேருந்துகளும் 12 லிட்டர் அளவு கொண்ட  கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுவதோடு உரிய சான்று அளிக்கப்பட்ட பின்னரே வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

அனைத்து  நடத்துனர்களுக்கும் எச்சில் தொட்டு  பயணச்சீட்டு வழங்க கூடாது  என அறிவுறுத்தப்பட்டு அதற்கு மாற்று ஏற்பாடாக, ஸ்பாஞ்ச் மூலம் வழங்கிட  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மேலாண் இயக்குநர் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Drivers ,Managing Director , 17,000 Drivers ,Drivers Facial, Managing, Director Ganesan
× RELATED வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி...