பதிவுப்பணிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?: ஐஜி ஜோதி நிர்மலாசாமி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை

சென்னை: பதிவுப் பணிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்று ஐஜி ஜோதி நிர்மலாசாமி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை  வழங்கியுள்ளார். இதுகுறித்து பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* அவசர தேவைக்கு மட்டுமே அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தர வேண்டும். பதிவுப்பணிகளுக்கு வரும் பொதுமக்களை மட்டுமே  அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

* பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

* அலுவலக நுழைவு வாயிலில் ஒரு வாஷ்பேசின் அமைத்து சோப்பு தண்ணீர்/சானிடைசர் வைத்து பதிவுக்கு வரும் பொதுமக்களை கைகளை   கழுவிய பின்னர் அலுவலகத்திற்குள் நுழைய அறிவுறுத்த வேண்டும்.

* பொதுமக்கள் பயன்படுத்தும் விரல் ரேகை இயந்திரத்தின் அருகில் சானிடைசர் வைத்து ஒவ்வொரு முறை பயன்படுத்தும் முன்பும் பயன்படுத்திய  பின்பும் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

* பதிவு அலுவலர்கள் பதிவுக்கு தாக்கலாகும் ஆவணங்களை கையுறை அணிந்து கொண்டு கையாள வேண்டும்.

* பிஓஎஸ் இயந்திரம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு முன்னரும், பின்னரும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய  அறிவுறுத்தப்படுகிறது.

* தற்போது ஏறக்குறைய 70 சதவீதம் ஆவணங்கள் பதிவு செய்த அன்றே பொதுமக்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள்  மீண்டும், மீண்டும் அலுவலகத்திற்கு  வருவதை தவிர்க்கும் பொருட்டு ஆவணங்களை அன்றன்றே திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>