×

மார்ச் 31 வரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை: தமிழக அரசு

சென்னை: கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மார்ச் 31 வரை வெளி மாநில வாகனங்கள் வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகள் மூடப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி, மருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி எனினும் முறையான பரிசோதனைக்குப் பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசுப் பேருந்துக்கள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பொது மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது. வாகனங்களும் நோய்  நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். நாட்டின் நலன்கருதி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர் போன்ற அத்யாவசிய வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ளது. சுயஊரடங்கு காரணமாக மார்ச் 22-ல் தமிழகத்தில் லாரிகள் இயங்காது என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5 லட்சம் வாகனங்கள் இயங்காது என லாரி உரிமையாளர் செயலாளர் சம்மேளன வாங்கிலி தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Andhra Pradesh ,Karnataka ,Kerala ,Tamil Nadu , Kerala, Karnataka, Andhra Pradesh ,banned,March 31
× RELATED ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி