×

திருவாரூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறி சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: 200 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்த 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்தை பராமரிக்க தவறியதற்காக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 269-ன் கீழ் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுக்கூட்டங்கள் வைக்க வேண்டாமென்றும் காவல் துறையினருக்கு மாநில அரசிடமிருந்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக பொது இடங்களில் யாரும் கூட வேண்டாம் என அறிவுறுத்திய பின்னரும் காவல் துறையினரின் அனுமதியன்றி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசு பேரிடராக அறிவித்த பின்னரும் போராட்டத்தை கைவிடாமல் தொற்றுநோய் பரப்பும் விதமாக நடந்து கொண்டதாக கூறி ஐபிசி 269-ன் கீழ் தற்போது 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு அனுமதி இல்லாமல், காவல்துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : protests ,CAA ,Tiruvarur , Thiruvarur, Corona, Prevention, CAA, Struggle, Litigation
× RELATED சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!