×

கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து ஏப். 21 வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் போராட்டங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 21 வரை போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.  மேலும்  வழக்கு விசாரணை ஏப்ரல் 21-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் அனைவரும் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியதை மக்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சென்னையில் இருக்கும் அணைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் மார்ச் 31-ம் தேதி வரை தரிசனத்திற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளாதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags : Protests ,High Court , Coronavirus virus,spreads Protests, rallies not allowed,till 21st
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...