×

துபாயிலிருந்து மதுரை வந்த 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை தீவிரம்!

மதுரை:  துபாயிலிருந்து மதுரைக்கு வந்த 143 பேர் சின்ன உடைப்பு என்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை துபாலிருந்து மதுரை வந்த 143 பயணிகளை, சின்ன உடைப்பு என்ற இடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 2 முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், அங்குள்ள 143 பேரில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்ற தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று இரவுக்குள் அவர்கள் அனைவரும் வீடு திரும்ப இருப்பதாகவும், அதற்கு முன்னர் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  அவர்கள் அனைவருமே 28 நாட்களுக்கு வீட்டை விட்டு, பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே இப்பகுதியில் மற்ற நபர்களோ, அல்லது பயணிகளின் உறவினர்களோ உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால், அதனை தடுக்கும் விதமாக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுக்காப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,Madurai ,Dubai Coronation ,Dubai , Dubai, Madurai, Loneliness, Corona, Experiment, Intensity
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது