×

செங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்: 12 கிராம மக்கள் பாதிப்பு

செங்கோட்டை: செங்கோட்டையில் குடிநீர் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலப்பதால் 12 கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கடந்த 2003ம் ஆண்டு ரூ.2,036 லட்சம் செலவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம்  செயல்படுத்தப்பட்டது. இதற்காக கட்டளைகுடியிருப்பில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு கட்டளைகுடியிருப்பு, கற்குடி, கேசவபுரம், பூலாங்குடியிருப்பு, புளியரை, தெற்குமேடு, புதூர், லாலாகுடியிருப்பு, தவணை, வேம்பநல்லூர், பகவதிபுரம், கோட்டைவாசல் உட்பட சுமார் 12 கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம்  ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
 
இந்நிலையில் செங்கோட்டை வாஞ்சி சிலை அருகேயுள்ள தஞ்சாவூர் கால்வாய் பாலத்தின் அருகே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி கடந்த மூன்று மாதமாக கால்வாயில் கலந்து வருகிறது. இதனால் செங்கோட்டை மற்றும் அதன்சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 12 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கடந்த 3 மாதமாக புகார் அளித்தும் இதுவரையில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படவில்லை கூறுகின்றனர். எனவே உடைந்துள்ள குழாயை சரி செய்து, தண்ணீர் விநியோகம் தொடர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Red Fort ,streams , The pipe at the Red Fort was broken Drinking water in streams for 3 months: impact of 12 villagers
× RELATED செங்கோட்டை அருகே பைக் மோதி காயமடைந்த விவசாயி சாவு