×

பாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

தர்மபுரி: பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹50ஆயிரம் அபராதமும் விதித்து தர்மபுரி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஓஜி.அள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம்(65). இவர் கடந்த 2018ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படித்து வரும் மாணவியை குண்டுக்கட்டாக தூக்கி சென்று, மறைவான இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார், பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தர்மபுரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி ஆறுமுகத்திற்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Tags : student ,jail ,Paparapatti Student ,prison ,sex harassment , Near Paparapatti Sexual harassment for student Farmer gets 5 years in prison
× RELATED நண்பர்களுடன் மீன் பிடித்தபோது கால்வாயில் தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி