×

நாம எப்போதும் நெகடிவ் பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட்  வீரர்கள், பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவில் ‘நெகடிவ்’ என்று வந்திருப்பதால் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கொரோனா பீதிக்கு பாகிஸ்தானும் தப்பவில்லை. அதனால் அங்கு நடந்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்(பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டது. பிஎஸ்எல் தொடரில் பல்வேறு அணிகளில் விளையாடிக்  கொண்டிருந்த 25 வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் பிஎஸ்எல் தொடரில் விளையாடிக் ெகாண்டிருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், போட்டி நடுவர்கள், அணிகளின் உரிமையாளர்கள், போட்டியை ஒளிபரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என மொத்தம் 128 பேருக்கு  கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது.
சோதனை முடிவில் ‘எல்லோரும் நெகடிவ்’. அதனால் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்று பாகிஸ்தான் நாடே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
இந்தியருக்கு அனுமதியில்லை: பிஎஸ்எல் ஒளிபரப்பு பணிக்காக பாகிஸ்தானுக்கு  29 இந்தியர்கள் சென்றிருந்தனர்.

போட்டி நிறுத்தப்பட்டதால், சாலை வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய வாகா எல்லை நோக்கி வந்தனர். அவர்களை பாகிஸ்தானின் அத்ரியில் தடுத்து நிறுத்திய அந்நாட்டு ராணுவம், ‘உங்களுக்கு வான் வழியாக இந்தியா திரும்பதான் அனுமதி. தரை வழியாக செல்ல அனுமதியில்லை’என்று திருப்பி அனுப்பி விட்டது. அதனையடுத்து இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்கான பணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.

Tags : Pakistani ,Karachi ,Negative , Karachi, Negative, Pakistan
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு