×

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேரள பயணிகளுக்கு பரிசோதனை

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை கேரளாவில் இருந்து ரயிலில் வந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இதனால் கேரளாவில் இருந்து வரும் ரயில், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கேரளாவில் இருந்து பயணிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து  திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 9.30 மணியளவில் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது.

அதில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கினர். அவர்களிடம் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு உள்ளதா என ரயில்வே போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதேபோல் நேற்று பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த ரயில் பயணிகளிடம் பெரம்பூர் ரயில்வே போலீஸ் எஸ்ஐ குருமூர்த்தி தலைமையில் 5 போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனையில், ரயிலில் வந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் அனைத்து வெளிமாநில ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் இன்னும் சில நாட்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறோம் என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.


Tags : Perambur ,Kerala ,passengers ,examination , Perambur, Kerala traveler, examination
× RELATED பெரம்பூரில்தான் இந்த நிலை… இப்தார்...