×

எம்பிஎம் தெரு மயானம் ஏப்ரல் 5 வரை மூடல்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு 70, மேல்பட்டி பொன்னப்பன் தெரு மயானபூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் மார்ச் 18ம் தேதி வரை மேற்கண்ட மயான பூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மேற்கண்ட மயான பூமியில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஏப்ரல் 5 வரை இயங்காது எனவும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு 68, திரு.வி.க. நகர் (தாங்கல்) மின்மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : MBM ,street fair ,MBM Street ,Closure ,Mayanam , MBM Street, Mayanam, April 5, Closure
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்