×

மாணவியை கடத்தி பலாத்காரம்: ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளி மாணவியை கடத்தில் பலாத்காரம் வழக்கில் ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதால் சிறுமி, அப்பா வழி பாட்டியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அரும்பாக்கத்தில் தங்கி, வாட்ச்மேன் வேலை செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த நவீன் (19) என்பவருக்கு, மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.

இந்த விஷயம் பாட்டிக்கு தெரிய வந்ததால், சிறுமியை கண்டித்து, வாலிபருடன் பேச தடை போட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2018ல் நவீன் சிறுமியை திருமண செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆந்திராவுக்கு கடத்தி சென்றுள்ளார். பாட்டி இதுபற்றி அண்ணாநகர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில், சிறுமி ஆந்திராவில் இருப்பது தெரிந்தது. அவரை மீட்டு வந்தனர். மேலும், விசாரணையில், நவீன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

பின்னர், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நவீனை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நவீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags : student Student ,Andhra , Student, rapist, 10 years in prison, Pocso
× RELATED சொந்த ஊர் செல்வதற்காக ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்ற இளைஞர் கைது!!