×

திருமணம் செய்துகொள்ளும்படி கூறியதால் காதலி மீது சரமாரி தாக்குதல்: காதலனிடம் விசாரணை

சென்னை: திருமணம் செய்துகொள்ளும்படி கூறியதால் காதலியை தாக்கி, பல்லை உடைத்த காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் நொச்சி குப்பத்தை சேர்ந்தவர் ராணி (18), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே உள்ள ஜெயச்சந்தின் (25) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜெயச்சந்திரன் ராணியுடன் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் ராணி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ராணி தனது காதலனிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் திருமணத்திற்கு சம்மதிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால், ராணி இதுபற்றி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், ஜெயச்சந்தின் வீட்டிற்கு சென்று, தனது மகளை திருமணம் செய்துகொள்ளும்படி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன் காதலியை வீட்டிற்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காதலியின் பல் உடைந்து ரத்த கொட்டியுள்ளது. இதையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சம்பவம் குறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். அதன்பேரில், காதலன் ஜெயச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Volleyball attack ,trial , Marriage, girlfriend, assault, boyfriend, trial
× RELATED ஊரடங்கில் காதலனுடன் ஊர்சுற்றிய நடிகை கைது