×

கடையில் திருடிய மாணவன் கைது

சென்னை: சூளை மாரிமுத்து முதலி தெருவில் சுரேஷ் (47) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு வாலிபர் ஒருவர் இந்த கடையினுள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை எடுத்து கொண்டு தப்ப முயன்றர். இதை பார்த்த சுரேஷ் சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சூளை சுப்பிரமணி தெருவை சேர்ந்த சுரேஷ் என்று தெரியவந்தது. இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Student ,Chennai , Chennai, theft , Student , arrested
× RELATED புதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில்...