×

ஈரான், பிலிப்பைன்ஸில் சிக்கி தவிக்கும் மீனவர்களை இந்தியா அழைத்து வர வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் திமுக எம்பிக்கள் நேரில் மனு

புதுடெல்லி: ஈரான், பிலிப்பைன்ஸில் சிக்கி தவிக்கும் மீனவர்களை இந்தியா அழைத்துவர வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, தலைமையில் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரான் பாலித்தீவுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் மூலமாக இந்நாடுகளில் தவித்துக்கொண்டிருக்கும் இந்திய மீனவர்களையும், இந்திய மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவர சிறப்பு விமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்பிக்களிடம் உறுதியளித்துள்ளார்.


Tags : fishermen ,India ,Iran ,Philippines ,DMK ,MPs , Iran, Philippine, Fishermen, India, External Affairs Minister, DMK MPs, Petition
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...