×

எம்எல்ஏவை பேச விடாமல் நீண்ட விளக்கம் அளித்த அமைச்சர்: திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை:சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் மயிலம் மாசிலாமணி (திமுக) பேசியதாவது:  2006 திமுக ஆட்சி காலத்தில் பயிர்க்கடன் வட்டி 9 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து 2009ல் பயிர்க்கடன் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்த அரசின் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் நலன் காக்கப்படவில்லை. நியாயவிலை கடை விற்பனையாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடுகின்றனர். இன்னும் ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இதற்கு பதில் அளித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது தொடர்பாக நீண்ட விளக்கம் கொடுத்து கொண்டே இருந்தார்.

இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ெதாடர்ந்து அவர்கள் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்றனர்.இதை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் அனைவரும் அமருங்கள் என்று கூறினார். முதல்வர் எடப்பாடி : ஊதிய உயர்வு தொடர்பாக பேசினால் பதில் தர வேண்டும். அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்கிறார்.  இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அதன்பிறகு செல்லூர் ராஜூ தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதையடுத்து இரண்டாவது முறையாக திமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எழுந்து நின்று தங்களது எதிர்ப்பை காட்டினார்கள். அப்போது சபாநாயகர் : உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கிறார்  என்று கூறினார். தொடர்ந்து 20 நிமிடங்களாக அமைச்சர் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு கொடுத்தது 20 நிமிடம் தான். அவர் தொடர்ந்து பேசினால் நான் எப்படி எல்லாவற்றையும் சுட்டிக்காட்ட முடியும். மத்திய அரசு நகை கடன் மானியத்தை ரத்து செய்து விட்டது.
இதுகுறித்து கேட்டால் விளக்கம் சொல்லவில்லை. நாங்கள் கேட்கிற கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் மணிக்காக அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கிறார். எந்த தவறுகளையும் சுட்டிக்காட்டக்கூடாது என்று நினைக்கின்றனர். திருத்திக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு அவர்கள் வாய்ப்பு வழங்க மறுக்கிறார்கள். இதை கண்டித்து ஒட்டு மொத்த திமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளோம்.

Tags : Minister ,DMK MLAs ,MLA , MLA, Minister, DMK MLAs, Walk
× RELATED சொத்து குவிப்பு வழக்கு:...