யுடியூப்பை பார்த்து காட்டில் வைத்து மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன் கைது: வயிற்றிலேயே குழந்தை பலி: மருத்துவமனையில் காதலி சீரியஸ்

சென்னை: திருமணமாகாத கல்லூரி மாணவிக்கு 9வது மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. அதை மூடி மறைப்பதற்காக யுடியூப்பில் பிரசவம் பார்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டு மாணவியை காட்டிற்கு அழைத்துச் சென்று வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்தபோது அதன் கை துண்டாகி வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் மாணவியை மருத்துவமனையில் சேர்த்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரில் காதலன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர் (27). இவர், தனியார் கேஸ் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மாணவிக்கு தந்தை இல்லை என்பதால் இந்த காதலுக்கு அவரது அம்மா சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் செளந்தர் வீட்டில் இவர்களின் காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

எனினும் பெண்ணின் அம்மா சப்போர்ட் இருந்ததால் இவர்கள் ஜாலியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் நெருக்கம் அதிகமாகி அந்த கல்லூரி மாணவி கர்ப்பமானார். இது குறித்து தன் காதலன் செளந்தரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செளந்தர் கர்ப்பத்தை கலைக்க பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். மாணவி என்பதால் சட்டவிரோத கரு கலைப்புக்கு பலர் மறுத்துவிட்டனர். அதற்குள் மாணவியின் வயிற்றில் குழந்தை வேகமாக வளரத் தொடங்கிவிட்டது. இனிமேல் கருகலைப்பு செய்தால் மாணவியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.  இதையடுத்து கருவை கலைக்காமல் விட்டுவிட்டனர். இதையடுத்து யுடியூப்பில் எளிதாக பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்து செளந்தர் கடந்த சில மாதங்களாக பார்த்து வந்துள்ளார். பின்னர், தன் காதலியிடம் எந்த மருத்துவமனையிலும் உனக்கு பிரசவம் பார்க்க மாட்டார்கள். காரணம் இன்னும் நமக்கு திருமணம் ஆகவில்லை.

ேமலும் நீ மாணவி என்பதால் சட்டசிக்கல் ஏற்படும். குழந்தை பிறந்து தெரிந்தால் நம் ஊரில் நாம் மானத்தோடு வாழ முடியாது. எனவே, யுடியூப்பில் நான் பிரசவம் பார்ப்பது எப்படி தெரிந்து வைத்துள்ளேன். உனக்கு நானே பிரசவம் பார்க்கிறேன் என்று கூறி உள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று முன்தினம் 2 மணி அளவில் கல்லூரிக்கு சென்றார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரியில் இருந்து வெளியே வந்த அவர் தன் காதலன் சௌந்தருக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து மருந்து கடைக்கு ெசன்று கையுறை, கத்திரிக்கோல், கத்தி, போர்க் மற்றும் பல்வேறு மருந்துகளை வாங்கிக் கொண்டு மாணவியை ஏற்றிச் செல்ல வந்தார். ஏற்கனவே பேசியபடி கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை வழியாக ஈகுவார்பாளையம் காப்பு காட்டுக்கு சௌந்தர் இருசக்கர வாகனம் மூலம் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து சில கருவிகள் மூலம் மாணவிக்கு பிரசவம் பார்க்க முயன்றார். அப்போது வயிற்றில் உள்ள குழந்தையை எடுப்பதற்காக பெண்ணின் மர்ம உறுப்பை அறுத்துள்ளார். இதையடுத்து கையை விட்டு குழந்தையை வெளியே எடுக்க முயன்றபோது குழந்தையின் ஒரு கை துண்டாகி வெளியே வந்துள்ளது.

இந்த பதற்றத்தில் கத்திரிக்கோலால் குழந்தையின் ெதாப்புள் ெகாடியை துண்டிப்பதாக நினைத்து மாணவியின் வயிற்று பகுதியில் உள்ள நரம்புகளை வெட்டிவிட்டார். இதனால் மாணவிக்கு திடீரென ரத்தபோக்கு ஏற்பட்டு மயக்க நிலைக்கு ெசன்றுள்ளார். இதனால் பயந்துபோன செளந்தர், உடனடியாக காப்புகாட்டில் இருந்து மாணவியை பைக்கில் வைத்து 22 கிேலா மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் ரத்தம் அதிகம் போய்விட்டதால் மயக்க நிலையில் பொன்னோரி மருத்துவமனையில் மருத்துவர்கள் உடனே அனுமதித்து, ராயபுரம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் காதலனுடன் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்து வயிற்றில் இறந்த நிலையில் இருந்த குழந்தையை எடுத்தனர். உடனடியாக ரத்தப்போக்கை நிறுத்தும் வகையில் ஆபரேஷன் செய்தனர்.

தற்போது அந்த மாணவி சீரியஸாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனா.  இதைப்பற்றி மருத்துவமனை தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சௌந்தரை கும்மிடிப்பூண்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தன் மகள் ஒன்பது மாதங்களாக மகள் கர்ப்பமாக இருப்பது தாய்க்குத் தெரியாமல் இருக்குமா என போலீசார் அவரை மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்று  விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து  பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசவம் பார்ப்பதற்கு  பயன்படுத்தப்பட்ட பொருட்கள் காட்டில் இருந்து கைப்பற்றினர். ஆனால், குழந்தையின் ஒரு கையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி மட்டும் அல்லாது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>