×

கொரோனா வைரஸ் எதிரொலி: பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க ஆலோசனை

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தற்ேபாது நடக்கும் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் உள்பட 27ம் தேதி தொடங்க உள்ள 10ம் வகுப்பு தேர்வையும் ஒத்திவைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த பாதிப்பும் இல்லாமல் பொதுத் தேர்வு நடக்கிறது.  இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய அரசின் சிபிஎஸ்இ தேர்வுகளையும், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் தற்போது நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்து, அனைத்து மாநிலத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ பள்ளித் தேர்வுகள் நேற்று முதல் அதிரடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தை பொருத்தவரையில் பிளஸ் 2 தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கியது.  பிளஸ் 1 தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி  பத்தாம் வகுப்பு தேர்வும் தொடங்க உள்ளது. அந்த தேர்வில் மட்டும் 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.  மேற்கண்ட 3 தேர்களிலும் தேர்வு பணியாற்ற மொத்தம் 49 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களும் ெகாரோனா பீதியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் எ்ன்று பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பிளஸ் 2 தேர்வுகள் பெரும்பாலும் நடந்து முடிந்துள்ள நிலையில் மற்ற தேர்வுகளையும் நிறுத்தி வைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அமைச்சர்கள் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. மேலும், அடுத்த வாரம் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளது.

அதற்காக சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். 31ம் தேதி மற்றும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 44 மையங்களில் தொடங்க உள்ளது.
பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதனால், விடைத்தாள் திருத்தும் பணியும் ஒத்தி வைக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த முடிவும் இன்னும் ெவளியிடப்படவில்லை.


Tags : elections ,Corona , Coronavirus, General Elections
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...