×

சாய்பாபா கோயிலில் தரிசனத்திற்கு தடை

சென்னை:  மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வியாழக்கிழமை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கொரேனா வைரஸ் காரணமாக சாய்பாபா கோயிலை மூட  நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் நோட்டீஸ்  ஒட்டப்பட்டிருந்தது. அதில் ‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைக்காக மயிலாப்பூர் அகில இந்திய சாய் சமாஜத்தில் நேற்று முன்தினம் 3 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களின் தரிசனத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Saibaba , darshan , Saibaba temple
× RELATED சீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..!