×

கொரோனா படுத்தும்பாடு ராணுவ வீரரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த மக்கள்: குன்னூரில் பரபரப்பு

குன்னூர்: மத்திய பிரதேசத்தில் இருந்து குன்னூர் வந்த ராணுவ வீரர் மற்றும் குடும்பத்தினரை மருத்துவ சான்றிதழ் இல்லாமல் விடமாட்டோம் என கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பாரத் நகர் பகுதியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பேரட்டி ஊராட்சி சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள கழிப்பிடங்கள் பள்ளி, வழிபாட்டுதலங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், குன்னூரில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் மத்திய பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விட்டு குடும்பத்துடன் குன்னூர் திரும்பியிருந்தார். இவர் அந்த கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கிராம மக்கள் ராணுவ வீரர் மற்றும் குடும்பத்தினரை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.மேலும் முழு பரிசோதனை செய்து, மருத்துவ சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கிராமத்திற்குள் அனுமதிப்போம் என்றனர். இதையடுத்து மருத்துவ சான்றிதழ் பெற்று வருவதாக ராணுவ வீரர் குடும்பத்தினருடன் மருத்துவமனைக்கு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : soldier ,town ,army soldier ,Corona Paditambadu ,Corona Padukkumbadu , Corona, soldier, Coonoor
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...