×

'நாளை தூக்கிலிட தடையில்லை'.. தண்டனைக்கு எதிரான நிர்பயா குற்றவாளிகளின் அனைத்து மனுக்களையும் ரத்து செய்து நீதியை நிலையாட்டிய நீதிமன்றங்கள்

டெல்லி : நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட தடையில்லை என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிர்பயா கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களும் தள்ளுபடியானதால் நாளை தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

*கடந்த 2012ம் ஆண்டு டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய  நால்வருக்கும் டெல்லி  நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

*இவர்கள், சட்ட விதிகளை பயன்படுத்தி நீதிமன்றத்திலும், ஜனாதிபதிக்கும் மாறி, மாறி மனு அனுப்பி வந்த நிலையில், தற்போது அனைத்தும் முடிவடைந்து நாளை காலை 5.30 மணிக்கு இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

*நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், நிர்பயா பாதிக்கப்பட்ட போது, தான் டெல்லியிலேயே இல்லை என்று கூறி தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தான் அந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் குற்றவாளி பவன் குமார் இளம் சிறார் உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த புதிய சீராய்வு மனுவும் இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது.

*மேலும் குற்றவாளிகள் பவன் மற்றும் அக்‌ஷய் இரண்டாவது முறையாக கருணை மனு தாக்கல் செய்த நிலையில் அதனை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஏற்கவில்லை.இந்த நிலையில் நிர்பயா குற்றவாளி அக்ஷய் குமார் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

*இதையடுத்து நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனையை ரத்து செய்யகோரிய மனு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடையில்லை என நீதிபதி கூறியுள்ளார். அந்த மனுவையும் நீதிபதி தர்மேந்தர் ராணா தள்ளுபடி செய்தார். கணவர் அக்சய் தாகூரின் தண்டனையை நிறுத்த வேண்டும் என நீதிபதி முன்பு அவரது மனைவி கதறி அழுதார். எனினும் தண்டனை நிறைவேற்ற தடையில்லை என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Tags : Courts ,convicts ,conviction Courts , Courts, Nirbhaya, Murder, Mukeshkumar Singh, Pawankupta, Vinay Kumar Sharma, Akshay Kumar Singh
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...