×

அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி

சிட்னி:  ‘பரிசோதனை முடிவுகள் வந்து விட்டன. எனக்கு கொரோனா பாதிப்பில்லை’ என்று ஆஸி. கிரிக்கெட்  அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொரோனா பீதி துவங்கிய வேளையில் 2 வார காலமும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் சுற்றுப்பயணத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடருக்காக கடந்த வாரம் நாடு திரும்பினார். ஆஸ்திரேலியாவில் அவர் கால் வைத்ததுமே, விமான நிலையத்தில் இருந்து, நேராக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரது ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.‘முதலில் இதை ஜோக் என்றுதான் நினைத்தேன். அப்புறம்தான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. பாசிட்டிவ் என ரிசல்ட் வராது என்ற நம்பிக்கையில் இருந்தேன். அதே போல வந்துள்ளது. எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. மகிழ்ச்சி’ என்று தற்போது கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

Tags : Dude ,Kane Richardson ,Corona , Corona no, Kane Richardson, glad
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...