×

கொரோனா தொற்று பீதி...: பொது இடத்தில் தும்மியவர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள்-மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

கோலாப்பூர்: மகராஷ்டிராவில் கொரானா பீதி காரணமாக பொது இடத்தில் தும்மிய ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகராஷ்டிராவில் கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோலாப்பூரில் சுகாதாரமற்ற முறையில் தும்மியதாக ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தாக்கப்படும் வீடியோவானது  சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனால் தாக்கப்பட்ட நபருக்கு சாதாரண தும்மல் இருந்த போதிலும் இவ்வாறு தாக்குதல் நடத்தியதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.



Tags : Coroners ,public ,panic attack ,Maharashtra Maharashtra , Coronavirus, sneezing, attack, civilians, Maharashtra
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...